பாசம் நா இது தான் பாசம் .. டூப்ளசிஸ் செய்த காரியத்தால் நெகிழ்ந்து போன சிஎஸ்கே ரசிகர்கள்.. வீடியோ!!

டூப்ளசிஸ் செய்த விஷியம் சிஎஸ்கே ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாசம் நா இது தான் பாசம் .. டூப்ளசிஸ் செய்த காரியத்தால் நெகிழ்ந்து போன சிஎஸ்கே ரசிகர்கள்.. வீடியோ!!

ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி தொடங்கி செம உற்சாகத்துடன், செம விறுவிறுப்பாக, பல திருப்புமுனைகளுடன் நடைபெற்று வருகிறது. அதிலும் ஆரம்பத்திலிருந்து ரசிகர்கள் எதிர்பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன.

நடப்பு ஆண்டின் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்து மன வேதனையில் உள்ளது.  இந்த போட்டியிலாவது கேப்டன் ஜடேஜா அணியை காப்பாற்ற வேண்டும் என முனைப்போடு உள்ளார். ஆனால், இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் ஆர்சிபி அணியில் சிஎஸ்கே-வின் சில தூண்கள் விளையாடுகிறது.

சிஎஸ்கே பேட்டிங் தூணாக இருந்த டூப்ளசிஸ், பவுலிங் தூணாக இருந்த ஜோஸ் ஹாசல்வுட் ஆர்சிபி அணியில் விளையாடுகின்றனர். இதே போல் தோனியை குருவாக நினைக்கும் விராட் கோலி இன்று அவரை எதிர்க்கவுள்ளதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இரு அணிகளும் பாச மழையில் நனையும் காட்சிகளை சிஎஸ்கே பகிர்ந்துள்ளது. அதில், மைதானத்தில் பயிற்சிக்கு சென்ற டூப்ளசிஸ், சிஎஸ்கே அணியின் ஜடேஜா, உத்தப்பா, பிராவோ, தோனி ஆகியோரை விரட்டி விரட்டி பாசமாக கட்டிப்பிடித்தார். அவர்களுடன் மிகுந்த ஆர்வத்துடன் பேசி மகிழ்ந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இப்படிப்பட்ட நண்பர்கள் எப்படி  ஒருவரையொருவர் எதிர்கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.