கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஹர்பஜன் சிங் அறிவிப்பு ....!!

இந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த ஹர்பஜன் சிங், அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளளார்.

கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஹர்பஜன் சிங் அறிவிப்பு ....!!

41 வயதாகும் ஹர்பஜன் சிங் 1998-ம் அண்டு மார்ச் 25-ந்தேதி டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 முதல் 15-ந்தேதி வரை நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

13 ஐபிஎல் சீசன்களில் 163 மேட்ச்களில் ஆடியுள்ள ஹர்பஜன் சிங் 150 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 417, ஒருநாள் போட்டிகளில் 269 சர்வதேச டி20 போட்டிகளில் 25 என்று 700 விக்கெட்டுகளுக்கும் மேல் சர்வதேச கிரிக்கெட்டில் எடுத்துள்ளார்.

மொத்தமாக 1200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை அவர் மொத்த கிரிக்கெட் வாழ்வில் கைaப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.