நீரஜ் சோப்ராவின் வெற்றியை கொண்டாடும் ஜெர்மனி மக்கள்... 

ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின் வெற்றியையும் ஜெர்மன் நாட்டவர் கொண்டாடி மகிழ்ந்தனர்.

நீரஜ் சோப்ராவின் வெற்றியை கொண்டாடும் ஜெர்மனி மக்கள்... 

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின்ஜெர்மன் பயிற்சியாளர்களுக்கு அவர்களது சொந்த கிராமங்களில் உற்சாக வரவேற்பு அளித்தனர். 
ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின்  வெற்றியையும் ஜெர்மன் நாட்டவர் கொண்டாடி மகிழ்ந்தனர். சோப்ராவின் தங்க வேட்டைக்கு பின்னர்  ஜெர்மன் பயிற்சியாளர் டாக்டர் கிளாஸ் பார்டோனீட்ஸ் இப்போது அவரது கிராமத்தில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

நீரஜ் சோப்ராவின் ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு தனக்கு இப்போது வரும் அழைப்புகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துவிட்டதாக அவர்  கூறுகிறார். நீரஜ் சோப்ராவைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்காக மக்கள் அவரை அழைக்கிறார்கள் என்று தனது மாணவரைப் பற்றி பெருமையுடன் கூறுகிறார் பயிற்சியாளர். அதேபோல் இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் Uwe Hohn-னும்  ஜெர்மனியை சேர்ந்தவர். அவரது சொந்த ஊரான ரெயின்ஸ்பெர்க்கில் அவருக்கும் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்தது.

நீரஜ் சோப்ராவின் ஒலிம்பிக்கின் செயல்திறன் பற்றி பலரும் தன்னிடம் நீண்ட நேரம் பேசுவதாக அவர் கூறினார். 100 மீட்டருக்கு மேல் எறிந்த உலகின் ஒரே ஈட்டி எறியும் வீரர் உவே ஹான் என்பது குறிப்பிடத்தக்கது.