விளையாட்டுகள் ஆண்களுக்கானது மட்டுமல்ல- இளம் கிரிக்கெட் வீராங்கனை இசி வ்வோங் பெருமை பேட்டி.!!

விளையாட்டுகள் ஆண்களுக்கானது மட்டுமல்ல- இளம் கிரிக்கெட் வீராங்கனை இசி வ்வோங் பெருமை பேட்டி.!!

6 வயதில், 50 பசங்களுடன் விளையாடும் பொழுது தான் தெரிந்தது, பெண்கள் விளையாடும் கிரிக்கெட், எல்லோருக்கும் பொதுவானது என்று, இந்த ஆண்டின் உலக கோப்பை பெண்கள் கிரிக்கேட்டுக்கு திருப்புமுனையாக இருக்காது. ஏன் என்றால், ஏற்கனவே, எங்களுக்கு என்று இடம்பிடித்து விட்டோம் என இசி வ்வோங் பெருமையாக கூறுகிறார்.

கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி துவங்கிய மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை, முன்னதாக இருந்ததை விட அதிக அளவில் பிரசித்தியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தைச் சேர்ந்தவர் இசபெல் எலினோர் சிஹ் மிங் வாங். இவர் தற்போது, வார்விக்ஷயர் கவுண்டி கிரிக்கெட் கிளப்பிற்காக விளையாடி வருகிறார். அதில், இவருக்கான எதிர்பார்ப்புகள் அதிகம் என்பதும் உண்மை.

கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி, மகளிர் தினத்தன்று, தனது கிரிக்கெட் பயணத்தைப் பற்றி பேசிய அவர், “தனது ஆறு வயதிலேயே, பள்ளி முடிந்ததும் ஒரு கிளப்பில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். சுமார் 50 ஆண் குழந்தைகளுக்கு இடையில் இரண்டு பெண்கள் மட்டுமே. அதில், ஒருத்தியாக நான் இருந்தேன். ஆனால் அது என்னைக் பாதிக்கவில்லை. ஒவ்வொருவரின் திறனுக்கும் வழிவகுக்கும் ஒரு விளையாட்டாகதான் கிரிக்கெட்டை நான் எப்போதும் பார்த்திருக்கிறேன்.

பந்து, பேட் இருந்தால் எங்கு வேண்டுமானாலும் கிரிக்கெட் விளையாடலாம். நான் ஆறு வயதில் நோல் மற்றும் டோரிட்ஜ் கிரிக்கெட் கிளப்பில் விளையாடத் தொடங்கியபோது, முழு கிளப்பிலும் நான் மட்டும் தான் ஒரே பெண் ப்ளேயர். ஒன்பது வயதில் வார்விக்ஷயர் கவுண்டி கிரிக்கெட்டுக்காக விளையாடத் தேர்ந்தெடுக்கப் பட்டபோது தான், நான் முதல் முறையாக ஒரு பெண் அணியில் விளையாடினேன். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் பெண்களுக்கான முதல் தொழில்முறை ஒப்பந்தங்களை 2014 இல் மட்டுமே அறிமுகப்படுத்தியது.

பெண்கள் விளையாட்டில் கவனம் செலுத்துவது, நீண்ட காலமாக இல்லாத ஒன்றாகவே உள்ளது. சமீப ஆண்டுகளில், கிரிக்கெட் உலகக் கோப்பைகள், மக்களிடையே கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2017 இல் இங்கிலாந்தின் சொந்த மண்ணில் வென்றது, ஆன்யா ஷ்ருப்சோலின் வீரத்தால் ஈர்க்கப்பட்டது. இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான சிறுமிகளுடன் எங்கள் விளையாட்டுக்கான ஒரு முக்கியமான தருணமாக இருந்தது. அதன்பிறகு, மக்கள் பலரும் இதை விளையாட விரும்பினர்.

ஆஸ்திரேலியாவில் 2020-ம் ஆண்டின், டி-20 உலகக் கோப்பையுடன், இதன் உத்வேகம் தொடர்ந்தது. மேலும், இறுதிப் போட்டிக்காக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு 86,000 ரசிகர்களையும் ஈர்த்தது. முன்பெல்லாம் இப்படி ஒரு கூட்டத்திற்காகத் தான் நாங்கள் கனவு கண்டோம். பெண்கள் கிரிக்கெட்டுக்கு கண்ணியமான பார்வையாளர்கள் உள்ளனர் என்பதை அந்த தருணங்கள் தான் நிரூபித்தன.

பெரும் அளவில் இருக்கும் பார்வையாளர்களுக்கு முன்னால் விளையாடுவது, ஒரு விளையாட்டு வீரருக்கு, பல வகையான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. நான் செய்வதில், எனக்கு மிகவும் பிடித்த விஷயம், அதை சக வீரர்கள் மற்றும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதுதான். சத்தம், கூச்சல் மற்றும் மற்றவர்களிடம் இருந்து வரும் உற்சாகம் போன்றவை, இன்னும் அதிகம் விளையாட ஆர்வத்தைக் கொடுக்கும்,.

கிரிக்கெட்டைச் சேர்ந்த பெண்களின் சாதனைகள் வளரும்போது, பார்வையாளர்களின் அளவும் அதிகரிக்கும். 2020 உலகக் கோப்பை போன்ற உலகளாவிய நிகழ்வுகள், பெண்கள் மட்டுமின்றி அனைவரும் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. கடந்த ஆண்டு, நான் விளையாடிய போது, பெண்கள் அணிகளைப் பார்க்கும் சிறுவர்கள் எண்ணிக்கையில் பெண் குழந்தைகள் இருந்தனர். பெண் விளையாட்டு வீரர்கள் இளம் பெண்களுக்கு மட்டுமல்ல, அனைத்து சிறுவர்களுக்கும் நல்ல முன்மாதிரிகள் என்ற எண்ணத்தை நாம் உருவாக்க வேண்டும்.

இந்த ஆண்டு உலகக் கோப்பை எங்கள் ஆட்டத்திற்கு ஒரு திருப்பு முனையாக இருக்காது. ஏனென்றால் நாங்கள் ஏற்கனவே ஒரு பெரும் அளவில் திருப்பம் ஏற்படுத்தி விட்டோம். பெண்கள் கிரிக்கெட் போட்டிகள் தற்போது அதிகரித்து வருகிறது. டி-20 கிரிக்கெட், எனது சொந்த ஊரான பர்மிங்காமில் நடக்கும் காமன்வெல்த் போட்டிகளில் நடைபெறும் போது, இந்த ஆண்டு தாய்வீட்டில் இருந்தே உலக கோப்பையை பார்க்கப் போகிறேன். இந்த நிகழ்வுகள் அனைத்தும் பெண்கள் விளையாட்டில் ஆர்வத்தை அதிகரிக்க உதவுகின்றன. பெண்கள் விளையாட்டில் கிரிக்கெட் தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரிகிறது.

இந்த பிரகாசமான எதிர்காலத்தின் ஒரு பகுதியாக இருப்பது ஒரு பாக்கியமாக நான் நினைக்கிறேன். மேலும், பெண்கள் கிரிக்கெட்டை மேம்படுத்த, நான் என்னை முழுமையாக அர்ப்பணிக்கிறேன். சமத்துவத்தை அடைய நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டும். அதுவே நமக்கு இலக்காகவும் இருக்க வேண்டும். தற்போது, நான் நோல் மற்றும் டோரிட்ஜ் கிரிக்கெட் கிளப்பில் உள்ளூர் பெண்கள் அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறேன். இங்கு, ஒவ்வொரு வாரமும் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி பெறுகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு நானும் மற்றொரு பெண் மட்டும் தான் இருந்தோம். இப்பொழுது இப்படி ஒரு வித்தியாசத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பெண்களின் கிரிக்கெட் பயணம் எந்த அளவு வளர்ந்திருக்கிறது என இதுவே பேசுகிறது.

கடந்த மார்ச் 8 ஆம் தேதியன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெரும் பெண் வீராங்கனைகளாக நமது விளையாட்டை உயர்த்த வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது. ஆண்களுக்கான விளையாட்டுகள் பலவற்றில், நாங்கள் இன்னும் இல்லை என்றாலும், பெண்களாகிய நாங்கள் சரியான திசையில் தான் சென்று கொண்டிருக்கிறோம். உலகளாவிய நிகழ்வுகளுக்கு அதிக பார்வையாளர்களை நாம் தொடர்ந்து ஈர்த்து வந்தால், அடுத்த தலைமுறைக்கு மேலும் நன்றாக செயல்பட ஊக்கமளிக்கும் என்பது என் கருத்து.” என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் இஸ்ஸி வோங் தனது பெருமையை வார்த்தைகளால் வெளிப்படுத்தினார். இவர் போன்ற பெண் சாதனையாளர்கள் மேலும் அதிகமாக, இவர்களது வழிகாட்டுதல்கள் மிகவும் முக்கியம் என பலரும்  இசி வோங்-கை பாராட்டி வருகின்றனர்.