முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நள்ளிரவில் கைது!

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நள்ளிரவில் கைது!

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்  கடந்த சில நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவு செய்தார். அந்த வீடியோவில் ஜாதிய ரீதியான கருத்துக்கள் கூறியிருந்ததாகவும் குறிப்பாக பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் யுவராஜ்சிங் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். ஆனால் நீதிபதி முன் ’தன்னுடைய கருத்து யாருக்காவது மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக யுவராஜ்சிங் கூறியதை அடுத்து உடனடியாக அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் திடீரென கைது செய்யப்பட்டுள்ள தகவல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.