விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே?

ஆஸ்திரேலியாவின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய  முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்  ஷேன் வார்னே?

 ஆஸ்திரேலியாவின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் சிட்னி-யில் தனது மகன் ஜாக்சனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தின் சக்கரங்கள் சுமார் 15 மீட்டர் தூரம் வரை சறுக்கிக் கொண்டு சென்ற நிலையில், ஷேன் வார்ன் காயங்களுடன் தப்பினார். அவருக்கு கால், இடுப்பை பகுதியில் அதீத வலி ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஷேன் வார்னுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது.