நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: ரஹானே கேப்டனாக நியமனம்...

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா அணியை ரஹானே வழிநடத்தி செல்ல உள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி:  ரஹானே கேப்டனாக நியமனம்...

 நியூசிலாந்துடனான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது வருகிற நவம்பர் 25ம் தேதி கான்பூரில் தொடங்கவுள்ளது.  கான்பூர் டெஸ்ட்  போட்டியில் விளையாடும் வீரர்களின் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

இதில் அஜிங்கியா ரஹானே, புஜாரா, கே.எல்.ராகுல், எம். அகர்வால், எஸ்.கில், எஸ். ஐயர், சாஹா, பாரத், ஜடேஜா, ஆர். அஷ்வின், பட்டேல், ஜே.யாதவ், யு. யாதவ், ஷர்மா, சிராஜ் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.  விராத் கோலிக்கு விடுப்பு அளிக்கப்பட்ட நிலையில், அணியை ரஹானே தலைமை தாங்கி நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.