FIFA உலகக் கோப்பை கால்பந்து..! அனல் பறந்த ஆட்டங்கள்..!

FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய போட்டிகளில் சவுதி அரேபியா, பிரான்ஸ் அணிகள் வெற்றிபெற்றன.
4 போட்டிகள்:
கத்தார் நாட்டில் நடைபெறும் 22-வது FIFA உலகக் கோப்பை கால் பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் 4 போட்டிகள் நடைபெற்றது. இதில் 8 அணிகள் தங்களுக்குள் மோதிக் கொண்டன.
சவுதி அரேபியா vs அர்ஜென்டினா:
முதலாவதாக சவுதி அரேபிய அணியை அர்ஜென்டினா அணி களத்தில் சந்தித்தது. ஆரம்பம் முதலே அர்ஜெண்டினா அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு மூலம் கோல் அடித்து முற்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அர்ஜென்டினா அணி, பின்னர் தடுமாறியது.
2வது பாதியில் சவுதி அரேபிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதையடுத்து இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சவுதி அரேபியா வெற்றி பெற்றது.
டென்மார்க் vs துனிசியா:
இதனை தொடர்ந்து டென்மார்க் மற்றும் துனிசியா அணிகள் மோதின. இரண்டு அணிகளும் களத்தில் சம பலத்துடன் விளையாடியதால் கோல் எதுவும் எடுக்காமல் பூஜ்ஜியத்துக்கு பூஜ்ஜியம் என்ற அளவில் போட்டி சமனில் நிறைவடைந்தது.
இதையும் படிக்க: கத்தாரில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்..! இதுக்கெல்லாமா தடை..!
மெக்சிகோ vs போலாந்து:
பின்னா் குரூப் சி பிரிவில் மெக்சிகோ அணியை போலாந்து அணி எதிர்கொண்டது. இந்தப் போட்டியிலும் இரு தரப்பு வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக போராடினர். இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், பூஜ்ஜியத்திற்கு பூஜ்ஜியம் என்ற நிலையில் போட்டி சமனில் முடிவடைந்தது
பிரான்ஸ் vs ஆஸ்திரேலியா:
குரூப் டி ஆட்டத்தில் பிராஸ் அணியை ஆஸ்திரேலியா அணி சந்தித்தது. ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் கிரெய்க் குட்வின் முதல் கோல் அடித்தார். அதுவே அவர்களின் இறுதி கோலாகவும் ஆனது.
சுதாரித்து ஆடிய பிரான்ஸ் அணியின் வீரர்கள் 4 கோல்களை அடித்த நிலையில், நான்குக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது.
இன்றைய போட்டிகள்:
இன்று நடைபெறும் போட்டியில்,
1.குரோஷியா - மொரோக்கோ;
2.ஜப்பான் - ஜெர்மனி;
3. ஸ்பெயின் - கோஸ்டா ரிக்கா மற்றும்
4. கனடா - பெல்ஜியம் அணிகள் விளையாடுகின்றன.