அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியின் வீரரான, லாரன் 16 ரன்களில் வெளியேறினார். ஆனால், மற்றொரு தொடக்க ஆட்ட வீராங்கனையான டேமி 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அவரை தொடர்ந்து விளையாட வந்த ஸ்சிவெர் 74 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இறுதியில் இங்கிலாந்து அணி 34 புள்ளி 5 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.