சிக்கல்லில் சிக்கிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்

இங்கிலாந்தின் பவுலரான ஜேம்ஸ் ஆண்டர்சன் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு செய்த தவறுக்காக தற்போது இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது

சிக்கல்லில் சிக்கிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்

இங்கிலாந்தின் பவுலரான ஜேம்ஸ் ஆண்டர்சன் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு செய்த தவறுக்காக தற்போது இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது

இங்கிலாந்து அணியின் மூத்த வேகபந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் பல போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இந்த நிலையில், இவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்ட ஒரு பதிவால் தற்போது சிக்கிலில் மாட்டியுள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு சக வீர்ரான ஸ்டூவர்ட் பிராட்டை பார்த்து, தற்போது நீங்கள் 15 வயதுடைய லெஸிபியன் போல் உள்ளீர்கள் என பதிவிட்டிருந்தார்.  இந்த டிவிட் தற்போது வைரலாகி வரும் நிலையில், இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு விளக்கமளித்துள்ள ஆண்டர்சன், 11 ஆண்டுகளுக்கு முன்பு தான் செய்த தவறு என்றும், தற்போது தான் முழுமையாக மாறியுள்ளதாக கூறியுள்ள அவர், தவறுகள் நாம் செய்வதுதான். பல ஆண்டுகளுக்கு முன்பு ஏதேனும் ட்வீட் செய்திருந்தால், நாம் அதிலிருந்து இப்போது பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், எதிர்காலத்தில் சிறப்பானவர்களாக நம்மை மாற்ற வேண்டும் என்றும் தான் அளித்துள்ள விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே இனவெறி குறித்து சர்ச்சை டிவிட் செய்த ராபின்சனை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடைவிதித்து போல, ஆண்டர்சனையும் கிரிக்கெட் விளையாட தடைவிதிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.