வெஸ்ட் இண்டீசை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி  

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 லீக் ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

துபாயில் நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில், எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறியது. கிறிஸ் கெய்ல் அடித்த 13 ரன்களே, அந்த அணியில் ஒர் வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. 14 புள்ளி 2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 55 ரன்கள் மட்டுமே எடுத்தது.

56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 70 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியை ருசித்தது.  8 புள்ளி 2 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டிப்பிடித்த இங்கிலாந்து அணி, 4 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.