சட்ட போராட்டத்தில் ஜோகோவிச் வெற்றி : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பாரா?

ஆஸ்திரேலிய விசா ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான சட்ட போராட்டத்தில் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார். 

சட்ட போராட்டத்தில் ஜோகோவிச் வெற்றி  : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பாரா?

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 17-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்ற டென்னிஸ் உலகின் நம்பர் ஒன் வீரரும், 9 முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்- ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்தை அடைந்த போது, அவரது விசா ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர், விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். நோவக் ஜோகோவிச்சுக்கு ஆதரவாக செர்பிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.  

ஜோகோவிச்சை திருப்பி அனுப்ப ஆஸ்திரேலிய அரசு தயாராக நிலையில் தனது விசா ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ஜோகோவிச் ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் சட்ட போராட்டத்தை தொடங்கினார். இந்த சட்ட போராட்டத்தில் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ள நிலையில் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.