
தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் நாட்டாமை பெல்ட் கட்டிகொண்டு வலம் வந்த ஜிபுட்டி நாட்டு செஸ் வீரர் முகமது அலி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். உலகம் முழுவதும் இருந்து வந்துள்ள விளையாட்டு வீரர்கள் தங்களது நாட்டின் கலாச்சாரத்தை பிரபலிக்கும் வகையில் உடையணிந்த்து போட்டி நடைபெறும் அரங்கிற்கு வருகின்றனர்.
பாரம்பரிய உடையில் வலம் வந்த ஜிபுட்டி நாட்டு செஸ் வீரர்!!
இந்த நிலையில் ஜிபுட்டி நாட்டை சேர்ந்த செஸ் வீரர் முகமது அலி, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் நாட்டாமை திரைப்படத்தில் வருவது போன்ற பெல்ட் ஒன்றை கட்டிகொண்டு வலம்வந்தார். இதுகுறித்து பேசிய அவர், தங்கள் நாட்டில் இந்த உடையின் பெயர் மரத்தி என கூறினார். தொடர்ந்து, அந்நாட்டின் நடனத்தையும் அவர் ஆடிக்காண்ப்பித்தார்.