தோனி பிறந்தநாள் கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட சாக்‌ஷி தோனி!!

ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் Happy Birthday Dhoni என்ற ஹேஷ்டேக்.

தோனி பிறந்தநாள் கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட சாக்‌ஷி தோனி!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இங்கிலாந்தில் தனது 41வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார்.

இதையடுத்து டோனியின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த வீடியோவை அவரது மனைவி சாக்க்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எனது மிகப்பெரிய ஆதரவாளராகவும் வழிகாட்டியாகவும் இருக்கும் சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என டோனிக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, ரசிகர்கள் ட்விட்டரில் Happy Birthday Dhoni என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி டோனியின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.