களத்தில் நீங்கள் நம்பர் 1..வீட்டில் எப்படி? என கேட்ட ரசிகர்...ஓப்பனாக பதிலளித்த டோனி!!

வீடியோ காணொலியில் ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த டோனியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

களத்தில் நீங்கள் நம்பர் 1..வீட்டில் எப்படி? என கேட்ட ரசிகர்...ஓப்பனாக பதிலளித்த டோனி!!

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் 26 ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. தொடங்கும் முதல் நாளே   சென்னை - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இதனால் சென்னை அணியின் கேப்டன் டோனி தற்போது ஐபிஎல் போட்டிகளுக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் .

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் வீடியோ காணொலியில் டோனி, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு டோனி  பதிலளித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது, அனைவருக்கும் தெரியும்  கேள்விக்குறிய ஸ்டைலிலே களத்தில் நீங்கள் நம்பர் 1 என்று, ஆனால் வீட்டில் எப்படி? என்று ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு பதிலளித்த டோனி, அனைவருக்கும் தெரியும் வீட்டில் மனைவி தான் நம்பர் 1 என்று கூறியுள்ளார். இவர் பதிலளித்த இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.