டோனியின் டுவிட்டர் பக்கம் இனி இப்படி இருக்கும்!  

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் ட்விட்டர் கணக்குக்கு, மீண்டும் நீல நிற டிக் வசதி கிடைத்துள்ளது.

டோனியின் டுவிட்டர் பக்கம் இனி இப்படி இருக்கும்!   

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் ட்விட்டர் கணக்குக்கு, மீண்டும் நீல நிற டிக் வசதி கிடைத்துள்ளது.

பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளை உறுதி செய்து, அவற்றிற்கு புளு டிக் வசதியை சமூக வலைத்தளங்கள் வழங்கி வருகின்றன. இதைப்போல டோனியின் ட்விட்டர் கணக்குக்கும் நீல நிற டிக் வழங்கப்பட்டிருந்தது. 80 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்கள் கொண்ட டோனியின் அதிகாரப்பூர்வ பக்கத்தின் நீல நிற குறியீட்டை, டுவிட்டர் நிறுவனம் திடீரென நீக்கியது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பேசு பொருளானது.

இதுகுறித்து விளக்கமளித்த டுவிட்டர் நிறுவனம், டோனியின் டுவிட்டர் கணக்கு நீண்டநாள் பயன்பாட்டில் இல்லாததால் புளு டிக் நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.இந்நிலையில் டோனியின் டுவிட்டர் கணக்கில் மீண்டும் புளு டிக் இணைக்கப்பட்டுள்ளது.