ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி  : ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி அணி !!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், மார்ஷ், வார்னரின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி  : ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி அணி !!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 58வது போட்டி, மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் - டெல்லி அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்தது. அதிபட்சமாக ரவிச்சந்திரன் அஷ்வின் 50 ரன்னும், தேவ்தத் படிக்கல் 48 ரன்னும் எடுத்தனர்.

இதனையடுத்து, 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோரின் அதிரடி அரை சதத்தால், 18 புள்ளி ஒரு ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டது. 

இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி, 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. தொடரில் 5வது தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் அணி, புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறது. 62 பந்துகளில் 89 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.