டெல்லி - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்.. பிளே ஆஃப் வாய்ப்பில் தொடர மிகவும் முக்கியமான போட்டி!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில், பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைப்பதற்கான இன்றைய போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.

டெல்லி - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்.. பிளே ஆஃப் வாய்ப்பில் தொடர மிகவும் முக்கியமான போட்டி!

உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் லீக்கான ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதுவரை 63 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், கடைசி 2 இடங்களில் உள்ள முன்னாள் சாம்பியன்களான சென்னை மற்றும் மும்பை அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டன.

குஜராத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், மற்று 3 இடங்களுக்கு 7 அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. அணிகளும் தலா 12 ஆட்டங்களில் ஆடி, 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், ரன்ரேட் அடிப்படையில் டெல்லி 5வது இடத்திலும், பஞ்சாப் 7வது இடத்தில் உள்ளன.

பிளே ஆஃப் வாய்ப்பில் தொடர, இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். தோல்வி அடைந்தால் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கி விடும். எனவே இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால், இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.