அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக டேல் ஸ்டெயின் அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாகப் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் அறிவித்துள்ளார்.  

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக டேல் ஸ்டெயின் அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி

38 வயது ஸ்டெய்ன், தென்னாப்பிரிக்க அணிக்காக 93 டெஸ்டுகள், 125 ஒருநாள், 47 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2004-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ஸ்டெய்ன், கடைசியாகக் கடந்த வருடம் டி20 சர்வதேச ஆட்டத்தில் விளையாடினார். 2019 ஆகஸ்டில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

 2020 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட ஆர்வம் தெரிவித்தார். ஆனால் அப்போட்டி ஒத்திவைக்கப்பட்டு இந்த வருடம் நடைபெறுகிற நிலையில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 2008-ல் இருந்து ஐபிஎல் போட்டியில் விளையாடும் டேல் ஸ்டெய்ன், இதுவரை 95 ஆட்டங்களில் விளையாடி 97 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 2020-ல் ஆர்சிபி அணி சார்பாக 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலகுவதாகக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார்.