அப்பா நலமாக உள்ளார் - கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவின் மகள் பேசும் வீடியோ இணையத்தில் வைரல்!

இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாட இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

அப்பா நலமாக உள்ளார் - கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவின் மகள் பேசும் வீடியோ இணையத்தில் வைரல்!

கடந்த 23-ம் தேதி லெய்செஸ்டர் அணியுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தின்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

இந்நிலையில், ரோகித்தின் மகள் சமைராவிடம் ரசிகர்கள் அப்பா இப்போ எப்படி உள்ளார் என்று கேட்டபோது, அவர்  நலமுடன் உள்ளார், தற்போது அவரது அறையில் தனியாக ஓய்வு எடுத்து கொண்டிருப்பதாக அழகாக ரசிகர்களுக்கு பதிலளித்த வீடியோ காட்சி தற்பேது வலைதளங்களில் வைரலாகிறது.

 இதனிடையே ரோகித் தான் நலமுடன் இருப்பதாக தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டிருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.