கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி!!

கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி!!

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இங்கிலாந்து செல்லும் இந்திய அணியுடன் அவர் செல்லவில்லை.

கடந்தாண்டு கொரோனால் ஒத்திவைக்கப்பட்ட, இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி, வரும் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை, இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக, இந்திய அணி இங்கிலாந்து கிளம்ப இருந்த நிலையில், அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அஸ்வின் இங்கிலாந்து செல்லாததால், அவருக்க பதிலாக மாற்று வீரர் அழைக்கப்பட வாய்ப்புள்ளது.