இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா!

மழை காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, பர்மிங்காமில் வரும் 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தற்போது அங்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. ரோகித் சர்மாவுக்கு நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் அணி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் குழுவின் பராமரிப்பில் உள்ளார் என்றும் பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.