இங்கிலாந்து அணியில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு...

பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடருக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணியில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு...

இங்கிலாந்தில் டெல்டா வேரியண்ட் பரவி வருவதையடுத்து அங்கு ஊரடங்கு இன்னும் தளர்த்தப்படவில்லை, இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில் 3 வீரர்கள், 4 பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வரும் வியாழனன்று கார்டிஃப் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறுகிறது, இந்த இங்கிலந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் 3 வீரர்கள் உட்ப்ட 7 பேருக்குக் கொரோனா என்பதால் தேர்வு செய்யப்பட்ட ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியும் தனிமைப்படுத்தப்பட்டன.

பாகிஸ்தானுக்கு எதிராக வியாழக்கிழமை ஒரு நாள் தொடர் தொடங்கவிருப்பதால் முற்றிலும் வேறு அணியை தேர்வு செய்யும் நிலைக்கு இங்கிலாந்து வாரியம் தள்ளப்பட்டுள்ளது, இதனால் இன்று இரவு  புதிய அணியை அறிவிக்கப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

மற்ற வீரர்களுக்கும் கோவிட் பரிசோதனை செய்யப்பட வேண்டும்,புதிய அணி தேர்வு செய்தால் அந்த வீரர்களுக்கும் கோவிட்-19 டெஸ்ட் செய்யப்பட வேண்டும் எனவே இங்கிலாந்து கிரிக்கெட்டில் மொத்தமாக இப்போது குழப்ப நிலை நீடிக்கிறது.

இதனையடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் மீண்டும் ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது. ஆர்.டி.பிசிஆர் சோதனையில் 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது,ஆனால் வீரர்கள் பெயரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிடவில்லை.