ஒலிம்பிக் நடைபெறும் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா உறுதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறும் கிராமத்தில் ஏற்கனவே ஒருவருக்கு கொரோனா உறுதியாகியிருந்த நிலையில், தற்போது 2 வீரர்களுக்கு தொற்று பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதித்ததை அடுத்து , கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஒலிம்பிக் போட்டியானது வருகிற 23-ம் தேதி டோக்கியோவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க வீரர்கள் ஏற்கனவே டோக்கியோ சென்றுள்ள நிலையில், போட்டி நடைபெறும் கிராமத்தில் நைஜீரியா ஒலிம்பிக் குழுவை சேர்ந்த 60 வயது நபருக்கு நேற்று தொற்று உறுதியானது. இந்தநிலையில் புதிதாக இரு வீரர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.