சர்ச்சைக்குள்ளான தோனியின் புகைப்படம்... விளக்கம் அளித்த வீட்டின் உரிமையாளர்

மரங்களை காப்போம் என்ற மரப்பலகை வாசகத்துடன், மரக்குடிலில் நின்ற மகேந்திரசிங் தோனியின் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து இல்லத்தின் உரிமையாளர் விளக்கமளித்துள்ளார்.

 சர்ச்சைக்குள்ளான தோனியின் புகைப்படம்... விளக்கம் அளித்த வீட்டின் உரிமையாளர்

மரங்களை நடுவோம், காடுகளை காப்போம்' என்ற வாசகம் எழுதப்பட்ட மரத்தாலான பலகையுடன், முழுவதும் மரத்தாலான குடிலில் நின்று தோனி போஸ் கொடுக்கிறார்.

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் இந்த புகைப்படம் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியானது. மரங்களை நடுவோம், காடுகளை காப்போம்' என்ற வாசகத்துடன் இடம்பெற்ற தோனியின் அந்த புகைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இந்த சர்ச்சை தொடர்பாக பேசிய அந்த ஓய்வு இல்லத்தின் உரிமையாளர் , கழிவுகளாக அப்புறப்படுத்தப்பட்ட மரங்கள் கொண்டு குடில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தோனியின் இந்த புகைப்படத்திற்கு, அவரின் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அந்த புகைப்படம் இமாச்சலப் பிரதேசத்தின் ரத்னாரியில் உள்ள மீனா பாக் என்னும் ஓய்வு இல்லத்தில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.