தேர்வு குழுவினருடன் மோதல்: கேப்டன் பதவியில் இருந்து, ரஷித் கான் திடீர் விலகல்...

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து, ரஷித் கான் திடீரென விலகியுள்ளார்.

தேர்வு குழுவினருடன் மோதல்:  கேப்டன் பதவியில் இருந்து, ரஷித் கான் திடீர் விலகல்...

  டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பதவியை ரஷித் கான் ராஜினாமா செய்துள்ளார். உலகக்கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்படும்போது கேப்டன் என்ற முறையில், தம்மிடம் தேர்வுக் குழுவினர் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் என்றும், ஆனால் தம்மிடம் கலந்து ஆலோசிக்காமலேயே அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.