செஸ் ஒலிம்பியாட் போட்டியிலிருந்து இருந்து சீனா விலகல்!!

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியிலிருந்து விலகுவதாக சீனா அறிவித்துள்ளது. 

செஸ் ஒலிம்பியாட் போட்டியிலிருந்து இருந்து சீனா விலகல்!!

இந்தியாவில் முதல்முறையாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும்  ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதாக பதிவு செய்திருந்த நிலையில் திடீரென விலகுவதாக சீனா அறிவித்துள்ளது. விலகியதற்கான எந்தவொரு காரணத்தையும் சீனா தெரிவிக்கவில்லை என ஒலிம்பியாட் செஸ் தொடரின் இயக்குநர் பரத் சிங் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பலம் வாய்ந்த ரஷியா மற்றும் பெலாரஸ் அணிகளுக்கு  தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சீனாவும் விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக மாட்ரிட்டில் நடைபெறும் போட்டியில் விளையாடி வரும், உலக அளவில் இரண்டாம்நிலை வீரரும், சீனாவின் முன்னணி வீரரான டிங் லிரன், ஒலிம்பியாட் போட்டியில் தானும் அணியும் பங்கேற்க மாட்டோம் என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.