சூடு பிடிக்கும் செஸ் ஒலிம்பியாட் 2022.. நேருக்கு நேர் மோதும் இந்திய அணிகள்..!

நாளுக்கு நாள் சுவாரசியமாக செல்லும் போட்டியில் இந்திய வீரர்கள் அசத்தல்.!

சூடு பிடிக்கும் செஸ் ஒலிம்பியாட் 2022.. நேருக்கு நேர் மோதும் இந்திய அணிகள்..!

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இன்றைய ஓபன் பிரிவு 7ஆம் சுற்று ஆட்டங்களில், இந்திய ஏ அணியும், இந்திய சி அணியும் போட்டியிடுகின்றன.

நேருக்கு நேர் மோதும் இந்திய அணிகள்: இன்று நடைபெறும் 7ஆம் சுற்று ஆட்டத்தில், இந்திய ஏ அணியும், இந்திய சி அணியும் மோதுகின்றன. இந்திய ஏ அணியில், ஹரிகிருஷ்ணன் பென்டாலா, விதித் சந்தோஷ் குஜராத்தி, எர்கெய்சி அர்ஜுன், நாராயணன், சசிகிரண் கிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நாராயணன் ஸ்ரீநாத் இந்த அணிக்கு கேப்டனாக உள்ளார்.தேஜாஸ் பக்ரி கேப்டனாக இருக்கும் இந்திய சி அணியில், கங்குலி சூர்யசேகர், சேதுராமன், குப்தா அபிஜித், புரணிக் அபிமன்யு, கார்த்திகேயன் முரளி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ஏ அணியின் ஹரிகிருஷ்ணன் பென்டாலா - சி அணியின் கங்குலி சூர்யசேகர் உடனும், விதித் சந்தோஷ் குஜராத்தி - சேதுராமன் உடனும் மோதுகின்றனர். எரிகெய்சி அர்ஜுன் - குப்தா அபிஜித்தையும், நாராயணன் - புரணிக் அபிமன்யுவையும் எதிர்கொள்கின்றனர்.

க்யூபாவுடன் மோதும் இந்திய பி அணி-யில்: குகேஷ், சரின் நிஹில், பிரக்ஞானந்தா, அதிபன், சத்வானி ரவ்னாக், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அணிக்கு கேப்டனாக பிரக்ஞானந்தாவின் தந்தையும், தமிழக செஸ் வீரருமான ரமேஷ் செயல்படுகிறார்.

இப்போட்டியில் இந்தியாவின் குகேஷ் - க்யூபாவின் ஆல்பர்னோஸ் கேப்ரெரா கார்லோஸ் டேனியல் உடனும், சரின் நிகில் - க்விசேடா பெரஸ் லூயிஸ் எர்னெஸ்டோ உடனும் மோதுகின்றனர். பிரக்யானந்தா - ஓர்டிஸ் சவுரஸ் இஸான் ரெனால்டோவையும், அதிபன் - அல்மெய்டா குவிண்டானா ஒமரையும் எதிர்கொள்கின்றனர்.