ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது சென்னை அணி !!

சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இதனால், ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை சென்னை அணி இழந்துள்ளது.

ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது சென்னை அணி !!

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, மும்பை அணி வீரர்களின் அபார பந்துவீச்சால் சரசரவென விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது. முடிவில், 16 ஓவரில் 97 ரன் மட்டுமே எடுத்து சென்னை அணி சுருண்டது. கேப்டன் தோனி மட்டும் பொறுப்புடன் விளையாடி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 36 ரன் எடுத்தார்.

98 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 14 புள்ளி 5 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 103 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக திலக்வர்மா, ஆட்டமிழக்காமல் 34 ரன் விளாசினார்.

இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்திய மும்பை அணி, தொடரில் 3வது வெற்றியை பதிவு செய்து ஆறுதல் அடைந்தது. அதேநேரம், இப்போட்டியில் தோல்வியடைந்ததால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை சென்னை அணி தவறவிட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம்  அடைந்துள்ளனர்.