மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி..! ரபேல் நடாலை நாக் அவுட் செய்த கார்கலஸ் அல்காரஸ்..!

அரையிறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சை, அல்காரஸ் எதிர்கொள்கிறார்..!

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி..! ரபேல் நடாலை நாக் அவுட் செய்த கார்கலஸ் அல்காரஸ்..!

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் ரஃபேல் நடாலை தோற்கடித்து கார்லஸ் அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெற்றுவரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், 5 முறை மாட்ரிட் சாம்பியனான  ஸ்பெயினின் ரஃபேல் நடால், சக நாட்டு வீரர் கார்லஸ் அல்காரசை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-2,1-6 ,6-3  என்ற செட் கணக்கில்  கார்லஸ் அல்காரஸ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சை, அல்காரஸ் எதிர்கொள்கிறார்.