அடேங்கப்பா.. ஒரே மேட்ச்.. ஒரே வெற்றியில் சிஎஸ்கே படைத்த பிரமாண்ட சாதனை.. பயங்கர குஷியில் ரசிகர்கள்!!

ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சிஎஸ்கே அணி பிரமாண்ட சாதனை படைத்துள்ளது.

அடேங்கப்பா.. ஒரே மேட்ச்.. ஒரே வெற்றியில் சிஎஸ்கே படைத்த பிரமாண்ட சாதனை.. பயங்கர குஷியில் ரசிகர்கள்!!

4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு தொடக்கமே மிக மோசமாக இருந்தது. தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்து வந்த சென்னை அணி நேற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஆர்சிபி-யுடன் நேற்று மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.. அதில் 4 விக்கெட்களுக்கு 216 ரன்கள் அடித்தது.  இதன் பின்னர் விளையாடிய ஆர்சிபி அணி 193 ரன்களுக்கெல்லாம் சுருண்டது. 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே அணி.

இந்நிலையில், இந்த ஆண்டின் தனது முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை அணி, ஐபிஎல் வரலாற்றில் மிக பெரிய சாதனையையும் படைத்துள்ளது. அதாவது, ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றி சதவீதம் கொண்ட அணியாக சிஎஸ்கே அணி உருவெடுத்துள்ளது. சிஎஸ்கே அணி கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 59.84 என்ற உச்ச வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது.

சிஎஸ்கே அணி இதுவரை 200 போட்டிகள் விளையாடி 118 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.80 முறை தோல்விகளை சந்தித்தது. சென்னைக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. அந்த அணி இதுவரை 221 ஆட்டங்களில் விளையாடி 125 வெற்றிகளையும் 92 தோல்விகளையும் பெற்றுள்ளது. மும்பை அணி வெற்றி சதவீதம் 57.46 ஆக உள்ளது.

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இனி தொடர் வெற்றி பெற்றால், இந்த சதவீதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுமட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றி பெற்ற கேப்டன் என்ற சாதனையையும் தோனி படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.