விண்ணை தொட்ட தோனியின் சிக்ஸர்கள்: பிளே-ஆப் சுற்றுக்கு முதல் அணியாக சி.எஸ்.கே. தகுதி

ஐதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

விண்ணை தொட்ட தோனியின் சிக்ஸர்கள்: பிளே-ஆப் சுற்றுக்கு முதல் அணியாக சி.எஸ்.கே. தகுதி

ஐதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 44-வது லீக் ஆட்டம், ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியில், வழக்கம்போல பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். அதிகபட்சமாக  தொடக்க ஆட்டக்காரர் சஹா 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே அடித்தது.

135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ருதுராஜ், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ருதுராஜ் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த மொயீன் அலி 17 ரன்களில் வெளியேறினார். ரெய்னா 2 ரன்னில் வெளியேற, டு பிளிஸ்சிஸ் 41 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய அம்பத்தி ராயுடு மற்றும் கேப்டன் டோனி, சென்னை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். சித்தார்த் கவுல் வீசிய கடைசி ஓவரின் 4-வது பந்தை, மைதானத்திற்கு வெளியே சிக்சராக பறக்கவிட்டு, வெற்றியை உறுதி செய்தார் டோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 19 புள்ளி 4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகும்.