பும்ராவுக்கு காயம்.. டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகல்.. இந்தியாவுக்கு பின்னடைவு..!

பும்ராவுக்கு காயம்.. டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகல்.. இந்தியாவுக்கு பின்னடைவு..!

பும்ராவுக்கு முதுகில் காயம்:

இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பயிற்சியின் போது இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. 

பிசிசிஐ அறிவிப்பு:

இதனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து பும்ரா விலகினார். மேலும், உலகக்கோப்பை டி20 தொடரிலும் பும்ரா பங்கேற்பாரா என்ற சந்தேகம் நிலவியது. இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க மாட்டார் என பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

ஆலோசனைக்கு பின்னர் முடிவு:

பும்ராவிற்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து மருத்துவக் குழு மற்றும் நிபுணர்களுடன் நடைபெற்ற விரிவான மதிப்பீடு மற்றும் ஆலோசனைக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

இந்திய அணிக்கு பின்னடைவு:

அவருக்கு பதில் அணியில் இடம் பெற உள்ள வேகப்பந்து வீச்சாளர் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது. டி20 உலக கோப்பை தொடரில் இருந்து பும்ரா விலகியது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.