விளையாட்டு வீரர்களுக்கான மரியாதை அழிந்துவிட்டதா?

விளையாட்டு வீரர்களுக்கு தற்போது மரியாதை அழிந்து வருகிறதா? என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் கொந்தளிப்பைக் கிளப்பியுள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கான மரியாதை அழிந்துவிட்டதா?

இந்தியாவில், கிரிக்கெட் மட்டுமே தலைக்கு மேல் வைத்து கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்திய விளையாட்டு வீரர்களோ ஏராளம். மக்கள் மத்தியில், கால்பந்து, கூடை பந்து, கபடி என பல வகையான விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் பலர் இருந்தாலும், க்ரிக்கெட் வீரர்கள் தவிர்த்து வேறு எந்த விளையாட்டு வீரர்களுக்கும் இங்க்கு நம் நாட்டில் மரியாதையும் இல்லை, சம்பாதியமும் இல்லை என பல முறை நிரூபித்து வருகின்றனர் அதிகாரிகள்.

இந்நிலையில், தற்போது, கால்பந்து வீரர் ஒருவருக்கு ஒரு அவமானம் நடந்துள்ளது என நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மதிப்புமிக்க டுராண்ட் கோப்பையை தங்கள் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சியை பெங்களூரு எஃப்சி தோற்கடித்தது, ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொஉட்த்தது. ஆனால், அந்த இறுதி போட்டியில், ரசிகர்களுக்கு பெரும் கோவத்தை அளித்துள்ளது ஒரு சம்பவம்.

கோப்பை வழங்கும் விழாவின் போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. பிரபல கால்பந்து வீரரான சுனில் சேத்ரிக்கு அருகில், கிட்டத்தட்ட பின்னால், மேற்கு வங்க ஆளுநர் லா.கணேசன் நின்று கொண்டிருந்தார். அவர்களின் புகைப்படங்களை கிளிக் செய்யும் நேரம் வந்தபோது, ​​​​மேற்கு வங்க கவர்னர், கோப்பையுடன் போஸ் கொடுக்க சேத்ரியை தள்ளிவிட்டார்.

கோப்பையை வழங்கும் போது, தான் போட்டோவில் நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக அந்த கோப்பையை பெற்ற வீரரை தள்ளி விட்ட காட்சி, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும், ஆளுநரின் ஆளுமை மீது கேள்வி எழுப்பியது.

இந்த சம்பவத்தின் வீடியோ கால்பந்து ரசிகர்களையும், நெட்டிசன்களையும் வெட்கப்பட வைத்துள்ளது. மேலும், பலர் அமைச்சரின் "வெட்கமற்ற நடத்தைக்காக" அவரைக் கண்டித்துள்ளனர்.

மேலும் படிக்க | கபடி வீரர்களுக்கு கழிவறையில் பரிமாறப்பட்ட உணவு...! இணையத்தில் வைரலான வீடியோ..!

இச்சம்பவம் மட்டுமின்றி, உத்திரபிரதேசத்தில், ஒரு சம்பவம் சமீபத்தில் படு வைரலாகி மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வளாகத்தில், கபடி விளையாட்டு வீரர்களுக்கு தயாரிக்கப்பட்ட பாதி சமைத்த உணவுகள் கழிவறையில் வைக்கப்பட்டு பரிமாறப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இது குறித்து, புகார் எழுந்ததை அடுத்து, மாவட்ட விளையாட்டு அதிகாரி  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

இது போன்ற சம்பவங்களால் மக்கள் மத்தியில் கடு எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.