தொடர் தோல்வியில் இருந்து மீளுமா சென்னை அணி - வலுவான பெங்களூரு அணியுடன் இன்று மோதல்!

பெங்களூரு - சென்னை அணி இன்று பலபரீட்சை...!

தொடர் தோல்வியில் இருந்து மீளுமா சென்னை அணி - வலுவான பெங்களூரு அணியுடன் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதுவரை இல்லாத வகையில் முதல் 4 போட்டிகளில் சென்னை அணி படு தோல்வியை தழுவிய நிலையில், ரசிகர்கள் உச்சக்கட்ட கோபத்தில் உள்ளனர். இதனால் புதிதாக கேப்டன் பதவியை வகித்த ரவீந்திர ஜடேஜா மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், 4 போட்டிகளில் விளையாடிய பெங்களூரு மூன்றில் வெற்றி பெற்று வலுவான நிலையில் இருப்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.