"ரோஹித் ஷர்மாவுக்கு லாஸ்ட் வார்னிங் விடும் பிசிசிஐ".. அடிமேல் அடி வாங்கும் மும்பை அணி.. என்ன நடந்தது?

மும்பை அணிக்கு தொடர் அடிமேல் அடி விழுந்து வருகிறது. அதில் ஒன்று ரோஹித் சர்மா விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

"ரோஹித் ஷர்மாவுக்கு லாஸ்ட் வார்னிங் விடும் பிசிசிஐ".. அடிமேல் அடி வாங்கும் மும்பை அணி.. என்ன நடந்தது?

நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிக மோசமானதாக அமைந்துள்ளது. தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்து வரும் மும்பை அணி, 5 வது போட்டியில் வெற்றி பெரும் என எதிர்பாக்கப்பட்டது. ஆனால் கடைசி வரை போராடியும் தோல்வியை தழுவியது.

நேற்று பஞ்சாப் அணியுடன் நடந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின், ஓப்பனிங் பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் 52 ரன்களும், ஷிகர் தவான் 70 ரன்களும் அடித்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களால் 20 ஓவர்களில் 198 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி. இதன் பின்னர் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் தனது 5வது வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி.

இந்நிலையில், ஏற்கனவே படும் சோகத்தில் இருக்கும் மும்பை அணிக்கு மேலும் ஒரு சிக்கல் கிளம்பியுள்ளது. அதாவது நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக புகார் எழுந்தது. இந்த புகார் நிரூபிக்கப்பட்டதால் ரோஹித் ஷர்மாவுக்கு ரூபாய் 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அணி வீரர்களுக்கு தலா ரூ.6 லட்சம் அல்லது போட்டி கட்டணத்தில் 25% அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் மும்பை அணி செய்த 2வது தவறு இதுவாகும். முதல் போட்டியில் டெல்லிக்கு எதிராக இந்த தவறை செய்தது. இதற்காக ரோஹித் சர்மாவுக்கு மட்டும் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சூழலில் 2வது தவறு நடந்ததால் நடவடிக்கை கடுமையாக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் விதிகளின்படி 3வது முறையாக கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச அதிக நேரம் எடுத்ததாக புகார் எழுந்தால் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். மேலும் அவருக்கு ரூ.25 லட்சமும், வீரர்களுக்கு ரூ.6 லட்சமும் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.