ஆஸ்திரேலிய ஓபன் ; 2-வது சுற்றுக்கு ரஃபேல் நடால் முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் ; 2-வது சுற்றுக்கு ரஃபேல் நடால் முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான 111-வது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் இன்று தொடங்கியது. வரும் 29-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் முதல் சுற்றில் இங்கிலாந்தின் ஜாக் டிராபரை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில், 7க்கு 5, 2க்கு 6, 6க்கு 4, 6க்கு 1 என்ற புள்ளி கணக்கில் ஜாக் டிராபரை போராடி வீழ்த்தினார். சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் ரஃபேல் நடால் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.