அன்ஷூ மாலிக் முதல் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

நார்வேயில் நடைபெற்ற சர்வதேச மல்யுத்த சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் முதல் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அன்ஷூ மாலிக் முதல் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

நார்வேயில் நடைபெற்ற சர்வதேச மல்யுத்த சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் முதல் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மகளிருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நார்வே நாட்டின் ஓஸ்லோவில் நடைபெற்றது. இந்த போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவின் கீழ் இன்று நடைபெற்ற இறுதிச்சுற்று போட்டியில் இந்திய இளம் புயல் அன்ஷூ மாலிக்கும்,அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான ஹெலின் மரோலிசுடனும் நேருக்கு நேர் மோதி கொண்டனர்.  ஆட்ட இறுதியில் சூடுபிடிக்கவே ஹெலின் மரோலியிடம் தோல்வியை தழுவி,அன்ஷூ மாலிக்  வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று  சாதனையையும் படைத்தார். இதேபோல்,மகளிருக்கான 59 கிலோ உடல் எடைப்பிரிவின் கீழ் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்னை சரிதா மோர் எட்டுக்கு இரண்டு என்ற புள்ளி கணக்கில் ஸ்வீடன் வீராங்கனை சாரா லிண்ட்பெர்க்கை வீழ்த்தி வெண்கலம் பதக்கத்தை வென்றார். இதுவரை உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 6-வது வீராங்கனை இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.