ஷேன் வார்னே மரணத்திலிருந்த மர்ம முடிச்சுகளுக்கு தீர்வு தந்த பிரேத பரிசோதனை அறிக்கை!!

பிரேத பரிசோதனையில் வார்னே மரணம் இயற்கையானது தான் என்று அறிக்கை வெளியாகியுள்ளது.

ஷேன் வார்னே மரணத்திலிருந்த மர்ம முடிச்சுகளுக்கு தீர்வு தந்த பிரேத பரிசோதனை அறிக்கை!!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷேன் வார்னே, அணிக்காக 145 டெஸ்ட் மற்றும் 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.  ஓய்வுக்கு பிறகு வர்ணனையாளராக பணியாற்றியதுடன், சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கருத்துகளை பதிவிட்டு வந்தார். சுழற்பந்து வீச்சு ஜாம்பவானாக விளங்கும் ஷேன் வார்னே கடந்த 4-ஆம் தேதி  மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இயற்கை மரணம் என்று சொன்னாலும், அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

ஷேன் வார்னே அவரது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து தாய்லாந்திற்கு சுற்றுலா  சென்றுள்ளனர். அங்கு  அவரது அறையில் திடீரென  உணர்ச்சிகள் எதும் இல்லாமல் கிடந்துள்ளார். இதைப்பார்த்த  நண்பர்கள் உடனே முதலுதவி செய்து பார்ந்துள்ளனர். அது பலனளிக்கவில்லை என்பதால், ஆம்புலன்ஸை அழைத்ததாக போலீசாரிடம் அந்த 3 நண்பர்களும் தெரிவித்திருந்தனர். ஆம்புலன்ஸ் வந்து சுமார் 20 நிமிடங்கள் வரை அவருக்கு சிபிஆர் செய்து பார்த்த பிறகே அவர் உயிர் பிரிந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

ஷேன் வார்னே மாரடைப்பால் தான் உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும், தாய்லாந்து போலீசாருக்கு அவரின் மரணத்தில் சந்தேகம் இருந்ததால் மருத்துவர்கள் அளித்த ரிபோர்டை கணக்கில் எடுக்காமல், அவரின் மூன்று நண்பர்களையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்போவதாக தாய்லாந்து போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்றே சொல்லலாம். ஆனால் அதற்கெல்லாம் முற்றிப்புள்ளி வைக்கும் விதமாக தாய்லாந்தில் நடைபெற்ற வார்னேவின் பிரேத பரிசோதனை விவரம் இன்று வெளியானது. அதில் ஷேன் வார்னேவின் மரணம் இயற்கையானது தான் என  தாய்லாந்து போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும், இதில், குற்ற செயல் எதுவும் இல்லை.  பிரேத பரிசோதனை அறிக்கை பற்றி விரிவாக பின்னர் வெளியிடப்படும் என்று புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.