ஜிம்பாவே ஆட்டத்தில் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு ஓய்வு....காரணம் என்ன....!!!

ஜிம்பாவே ஆட்டத்தில் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு ஓய்வு....காரணம் என்ன....!!!

மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஜிம்பாவே அணியின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைவரான விவிஎஸ் லக்‌ஷ்மண் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.

ஜிம்பாவே தொடரில் ஷிகர் தவான் அணிக்கு தலைமை தாங்குவார் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.  பின்னர் இவர் அணியின் துணை கேப்டனாகவும் கே.எல். ராகுல் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி, ரிஷப் பந்த், ஜாஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.

வாஷிங்டன் சுந்தர் ஓய்வு:

இந்திய ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

சுந்தருக்கு பதிலாகா ஷாபாஸ் அகமதுவை கிரிக்கெட் தேர்வுக் குழு தேர்ந்தெடுத்துள்ளது.  இங்கிலாந்தில் நடந்த ஆட்டத்தில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  அதனை தொடர்ந்து ஜிம்பாப்வே ஆட்டத்தில் சுந்தருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி:

கே.எல்.ராகுல்(கேப்டன்), ஷிகர் தவான்(துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷூப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷான்(விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்.

இதையும் படிக்க: இந்தியாவின் ஏபி டிவில்லியர்ஸ் இவர்தான்.. ரிக்கி பாண்டிங்கே சொல்லிட்டாரா? அப்போ சரியாதான் இருக்கும்..!