அபுதாபி ஓபன் டென்னிஸ் : சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வி..!

அபுதாபி ஓபன் டென்னிஸ் : சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வி..!
Published on: 
Updated on: 
1 min read

அபுதாபி ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

துபாயில் நடந்து வரும் இந்த தொடரின் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில், இந்தியாவின் சானியா மிர்சா அமெரிக்காவின் பெத்தனி மெட்டக் சாண்டஸ் ஜோடி, பெல்ஜியத்தின் கிர்ஸ்டன் பிலிப்கன்ஸ், ஜெர்மனியின் லாரா செக்மெண்ட் ஜோடியுடன் மோதியது. இதில் சானியா மிர்சா ஜோடி, 3 க்கு 6, 4 க்கு 6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. கடந்த வாரம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியிலும் சானியா மிர்சா ஜோடி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com