கால்பந்து போட்டியில் 92 ஆண்டுகளுக்குப் பின் நடந்த சாதனை..! வேற லெவல்..!

FIFA உலகக்கோப்பை தொடரில் நேற்றைய ஆட்டத்தில் 92 ஆண்டுகளில் இல்லாத ஒரு சாதனையை படைத்துள்ளார் மெக்சிகோ கோல்கீப்பர்.
4 போட்டிகள்:
கத்தார் நாட்டில் நடைபெறும் 22-வது FIFA உலகக் கோப்பை கால் பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் 4 போட்டிகள் நடைபெற்றது. இதில், சவுதி அரேபியா vs அர்ஜென்டினா, டென்மார்க் vs துனிசியா, மெக்சிகோ vs போலாந்து, பிரான்ஸ் vs ஆஸ்திரேலியா ஆகிய 8 அணிகள் தங்களுக்குள் மோதிக் கொண்டன.
மெக்சிகோ vs போலாந்து:
இந்த போட்டிகளில் அதிக கவனம் பெற்ற போட்டி, குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள தரவரிசையில் 13வது இடத்தில் உள்ள மெக்சிகோ, 26வது இடத்தில் உள்ள போலாந்துடன் பலப்பரீட்சை நடத்தியது தான். ரசிகர்கள் அனைவரின் பார்வையும் போலாந்து அணியில் விளையாடும் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் ராபர்ட் லெவோண்டஸ்கி மீது விழுந்தது.
இதையும் படிக்க: இது யாருக்கெல்லாம் கடைசி உலகக்கோப்பை? சரித்திரம் படைக்கப் போவது யார்?
ராபர்ட் லெவோண்டஸ்கி:
இதுவரை 76 சர்வதேச கோல் அடித்துள்ள ராபர்ட் லெவோண்டஸ்கி, 5 உலக கோப்பை ஆட்டங்களில் விளையாடி இதுவரை ஒரு முறை கூட கோல் அடிக்கவில்லை. இந்த முறை போலாந்து அணி, ராபர்ட் லெவோண்டஸ்கி தலைமையில், வியூகங்களை அமைத்து அதிரடி ஆட்டத்தை ஆடியது.
மெக்சிகோ vs போலாந்து:
மெக்சிகோ வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் போலாந்து வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் இரண்டாம் பாதியில், 56 ஆவது நிமிடத்தில் போலாந்து அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. இதனால் உலகக் கோப்பை போட்டியில் ராபர்ட் தனது முதல் கோலை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
92 ஆண்டுகளில் இல்லாத சாதனை:
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக மெக்சிகோ கோல் கீப்பர் ஓச்சா அதனை தடுத்தார். இதன் மூலம் 1930 ஆம் ஆண்டுக்கு பிறகு பெனால்டி கிக் அடிக்கும் பந்தை தடுத்த முதல் கோல் கீப்பர் என்ற சாதனையை ஓச்சா படைத்துள்ளார்.
இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், பூஜ்ஜியத்திற்கு பூஜ்ஜியம் என்ற நிலையில் போட்டி சமனில் முடிவடைந்தது