ஓவல் டெஸ்ட் போட்டி: மாறி, மாறி சஸ்பென்ஸ் வைத்த இந்தியா-இங்கிலாந்து அணிகள்...

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஓவல் டெஸ்ட் போட்டி:  மாறி, மாறி சஸ்பென்ஸ் வைத்த இந்தியா-இங்கிலாந்து அணிகள்...

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்யவே, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், கேப்டன் விராட் கோலியைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்கவில்லை. விராட் கோலியும் 50 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, இறுதி கட்டத்தில் அதிரடி காட்டிய  ஷர்துல் தாகூர், 36 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 57 ரன்கள் விளாசினார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களை சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ராபின்சன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின், தொடக்க ஆட்டக்காரர்களான ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீத் ஆகியோரை, ஜஸ்பிரித் பும்ரா ஆரம்பத்திலேயே வெளியேற்றினார். பின்னர் டேவிட் மலானுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோ ரூட், 21 ரன்கள் எடுத்த நிலையில், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் போல்டானார். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி, தந்து முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது.