4வது டி20 கிரிக்கெட் போட்டி.. வெஸ்ட் இண்டீஸ் Vs இந்தியா- வெற்றி யாருக்கு?

4வது டி20 கிரிக்கெட் போட்டி.. வெஸ்ட் இண்டீஸ் Vs இந்தியா- வெற்றி யாருக்கு?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணி

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை வகிக்கிறது.

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு 4வது போட்டி

இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 4 வது டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில் நகரில் இன்று நடைபெறுகிறது. இரு அணி வீரர்களுக்கும் விசா கிடைப்பதில் இழுபறி நீடித்ததால் இந்த போட்டிகள் திட்டமிட்டபடி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது. நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் அனைவருக்கும் விசா வழங்கப்பட்டதை அடுத்து 4வது போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

ரோகித் சர்மா களமிறங்குவாரா?

கடந்த போட்டியில் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, முழுவதுமாக குணமடைந்துவிட்டார். இதனால் அவர் இன்றைய போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.