எதிர்வரும் 5 வருடங்களில் இந்தியாவுக்கு 33 டெஸ்ட் போட்டிகள்..! 30 வருடங்களுக்கு பிறகு பார்டர்-கவாஸ்கர் டிராபி..!

அடுத்த 5 ஆண்டுகளில் டெஸ்ட் தொடர், டி20 போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

எதிர்வரும் 5 வருடங்களில் இந்தியாவுக்கு 33 டெஸ்ட் போட்டிகள்..! 30 வருடங்களுக்கு பிறகு பார்டர்-கவாஸ்கர் டிராபி..!

777 சர்வதேச போட்டிகள்: அதன்படி, ஐசிசியில் முழுநேர உறுப்பினராக உள்ள 12 நாடுகளின் அணிகள், 173 டெஸ்ட் போட்டிகள், 281 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 323 டி20 போட்டிகள் என மொத்தம் 777 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளன. 

இந்தியாவுக்கு 33 டெஸ்ட் போட்டிகள்: இந்த காலகட்டத்தில் இந்திய அணி மட்டும் 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற உள்ளன. 

இணையும் இந்தியா-இலங்கை: 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் மீண்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பையை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்த உள்ளன.

2முறை இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்: இந்த அட்டவணையின் சிறப்பம்சமாக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரானது, 
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக 2 முறை நடைபெற உள்ளது. 

30 வருடங்களுக்கு பிறகு நடைபெறும் தொடர்: கடந்த 30 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் 2 முறை பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. நடப்பு 5 ஆண்டு கிரிக்கெட் போட்டிகளுக்கான எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, எதிர்வரும் 2023-27ம் ஆண்டுக்கான போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.