ஹாட்ரிக் அடிக்குமா இந்தியா?.. இலங்கைக்கு எதிராக 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!!

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்குகிறது.

ஹாட்ரிக் அடிக்குமா இந்தியா?.. இலங்கைக்கு எதிராக 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் மொகாலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு போட்டியாக தொடங்குகிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்தியாவில் அரங்கேறும் 3-வது பகல்-இரவு டெஸ்ட் இதுவாகும். இதற்கு முன்பு நடைபெற்றுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வாகை சூடியுள்ள இந்தியா மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் ஆயத்தமாகியுள்ளது.