2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி...  தொடரை வெல்லுமா இந்திய அணி?

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ராஞ்சியில் இன்று நடைபெற உள்ளது.

2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி...  தொடரை வெல்லுமா இந்திய அணி?

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரில் 1 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் போட்டி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்றிரவு நடைபெற உள்ளது. இதில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும்.

எனவே, நியூசிலாந்து அணி வீரர்கள் பதிலடி கொடுக்க போராடுவார்கள். அதே சமயம் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணியினர் ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் இன்றைய கிரிக்கெட் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.