தடுப்பூசி செலுத்தாதவர்கள் 21 நாட்கள் கட்டாய தனிமை... சீன ஒலிம்பிக் கமிட்டி அதிரடி உத்தரவு...

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் தடுப்பூசி செலுத்தாத போட்டியாளர்கள் 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு பிறகு அனுமதிக்கப்படுவார் என சீன ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்தாதவர்கள் 21 நாட்கள் கட்டாய தனிமை... சீன ஒலிம்பிக் கமிட்டி அதிரடி உத்தரவு...

சீன தலைநகரான பீஜிங்கில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4- ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதால் மிகுந்த முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள பிற நாட்டு வீரர் வீராங்கனைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சீன ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ளது.

அதன்படி போட்டிகளின் பங்கேற்க உள்ள வீரர் வீராங்கனைகள் மைதானத்தை தவிர்த்து வேறெங்கும் செல்ல அனுமதி இல்லை எனவும், தடுப்பூசி செலுத்திக் கொண்ட போட்டியாளர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள் எனவும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு பிறகு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.