14 கோடி கொடுத்து எடுத்தது Waste-ஆ.?.. தொடக்கத்திலேயே சிஎஸ்கே-வுக்கு ஷாக் கொடுத்த தீபக் சாஹர்.?

ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சாஹர் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

14 கோடி கொடுத்து எடுத்தது Waste-ஆ.?.. தொடக்கத்திலேயே சிஎஸ்கே-வுக்கு ஷாக் கொடுத்த தீபக் சாஹர்.?

இந்திய- மேற்கிந்திய நாடுகளுக்கு இடையிலான 3வது போட்டியின் போது சிஎஸ்கே வீரர் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் தங்கி காயத்திலிருந்து மீண்டு வரும் பயிற்சியில் ஈடுபட்டார்.

மேலும் தீபக் சாஹருக்கு ஏற்பட்டுள்ள காயம் குணம் அடைய நீண்ட நாட்கள் ஆகும் என அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவரால், பெரும்பாலான ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தீபக் சாஹரை 14 கோடி கொடுத்து எடுத்த சிஎஸ்கே அணிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணிக்காக தீபக் சஹார் இதுவரை 58 போட்டிகள் விளையாடி அதில் 58 விக்கட்களையும் வீழ்த்தி உள்ளார். அதில், பவர் பிளேவில் மட்டும் 42 விக்கட்களை வீழ்த்தியுள்ளார் தீபக் சஹார். இது மட்டுமில்லாமல் அவரின் பேட்டிங் திறமையும் நாளுக்கு அதிகரித்து வந்தது.. 

கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக 69 ரன்களும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 54 ரன்களும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 38 ரன்களும் எடுத்தார். ஒரு சிறப்பான பேட்டிங்கையும், பௌலிங்கையும் வெளிப்படுத்தி வரும் தீபக் சாஹரை ஏலத்தில் சிஎஸ்கே அணி 14 கோடி கொடுத்து எடுத்தது.

தீபக் சாஹர் பெரும்பாலான போட்டிகளில் விளையாடாமல் போனால்,  சிஎஸ்கே-வில் ஒரு அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் இல்லாத நிலை ஏற்படும்... மேலும் தீபக் சாஹர் இல்லாதது சிஎஸ்கேவிற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.