பாத்ரூமில் மனைவியை பரிதவிக்கவிட்ட கணவன்..!

பாத்ரூமில் மனைவியை பரிதவிக்கவிட்ட கணவன்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனைவியை குளியலறையில் 5 நாட்களாக அடைத்து வைத்திருந்த கணவர்.

நாடு முழுவதும் கொரோனா கோர தாண்டவம் ஆடி வந்த நிலையில், நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வந்துக் கொண்டுதான் இருந்தது. 
கொரோனாவால் பலியாகி விடுவோமோ என்ற அச்சத்தில் பலரும் பரிதவித்து கொண்டுதான் இருந்து வருகின்றன. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களாக இருந்தால் கூட யாரும் உதவ தயாராக இருப்பதில்லை.. தன்னுடை உயிரை பாதுகாக்கவே நினைக்கின்றனர்.

இதற்கு ஏற்றார் போல் தெலுங்கானவில் உள்ள மஞ்சிரியாலா மாவட்டத்தில், லட்செட்டிபெட்டா பகுதியை சேர்ந்த பெத்தையா அவரது மனைவி நரசிம்மா இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

பாதிக்கப்பட்ட மனைவியை மருத்துவரிடம் காமிக்காத கணவனே.... தனது வீட்டுக்குள் வரவிடாமல் வெளியில் உள்ள குளியலறையில் தங்க வைத்துள்ளார். மேலும் அவருக்கு போதிய உணவு கூட வழங்குவது இல்லையாம்....நரசிம்மாவை துன்புறுத்துவதை பார்த்த அருகில் இருப்பவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார் நரசிம்மாவை மீட்டு, அவரது கணவருக்கு மனநல ஆலோசனை வழங்கி அவரது வீட்டில் உள்ள தனி அறையில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.